காவிரி: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு
ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழகம் முழுவதும் அமைதிவழியில் போராட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்
Comments
Post a Comment