காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்- ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் என கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் வரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் திமுகவினரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பரப்புரை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment